Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு வந்த சோதனை!

நாடு முழுக்க பலத்தை ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றவர் நடிகை சன்னி லியோன். அவரை பார்த்து மற்ற நடிகைகளுக்கே பொறாமை என்று சொல்லலாம். பாலிவுட் சினிமாவில் இவருக்கான வரவேற்பு மிகவும் அதிகம்.

கவர்ச்சி படங்களில் நடிப்பதால் பல சர்ச்சைகளில் அடிபட்டார். தற்போது தமிழில் வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் பட பூஜைகள் அண்மையில் நடந்தது.

இதற்காக சென்னை வந்த அவர் ஒரு நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதியில் நடைபெற இருந்த இந்த நிகழ்ச்சிக்கு தடை கேட்டு சமூக ஆர்வலர் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் கூட பெங்களூரில் புத்தாண்டை ஒட்டி ஒரு பொது நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை சந்திக்க இருந்தார். அப்போதும் இதே போல சர்ச்சையாகி அந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது.