Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் பிரபல நடிகருடன் ஜோடி சேரும் நடிகை சமந்தா!

நடிகை சமந்தா பல ஹிட் படங்களை கொடுத்தவர். தற்போது சிவகார்த்திகேயன், விஷால், விஜய் சேதுபதி ஆகியோரின் படங்களில் நடித்து விட்டார். மேலும் மகாநதி படத்திலும் நடித்துள்ளார்.

நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதற்கு முன்பே இருவரும் இணைந்து ஏ மாய சேசாவே படத்தில் நடித்தார்கள். தற்போது மீண்டும் அப்படி ஒரு நிகழ்வு நடக்கப்போகிறதாம்.

சமீபத்தில் இயக்குனர் சிவா நிர்வானா ஒரு ரொமான்ஸ் கதையை சைதன்யாவிடம் கூறியுள்ளார். இதை கேட்டு இம்பிரஸ் ஆன அவர் ஹீரோயின் கதாபாத்திரத்தில் சமந்தாவே நடிக்கட்டும் என கூறிவிட்டாராம்.

சமந்தாவும் ஓகே சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.