Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகரின் படத்தில் நடிக்க மறுத்த அதிதி ராவ்!

நடிகை அதிதி ராவ் காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். மணிரத்னம் இயக்கிய இப்படத்தின் மூலம் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

சமீபத்தில் வெளியான பத்மாவத் படத்திலும் அவர் மெகருன்னிஷாவாக நடித்திருந்தார். இதனையடுத்து அவர் மீண்டும் மணிரத்னம் இயக்கும் நவாப் படத்தில் நடிக்க கமிட்டாகியிருந்தார்.

தற்போது அவர் தெலுங்கில் சுதீர் பாபுவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தேஜாஸ் இயக்கத்தில் பிரபல நடிகர் வெங்கடேஷ் நடிக்கும் பட வாய்ப்பை தவிர்த்து விட்டாராம்.

இதனால் இந்த வாய்ப்பு இப்போது ஸ்ரேயாவுக்கு சென்றுள்ளது. வெங்கடேஷ் சீனியர் ஹீரோ என்பது தான் அனைவருக்கும் தெரியுமே. இதனால் தான் அதிதியின் முடிவு அப்படி என்கிறது டோலிவுட்.