Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல படத்திற்கு எப்போது இசையமைப்பீர்கள்? விசுவாசம் படத்தால் பிரபல இசையமைப்பாளருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

விசுவாசம் படத்தில் நடிகை நயன்தாரா தான் அஜித்துக்கு ஜோடி என்பது தெரிந்துவிட்டது. சிவாவுடன் அஜித் மீண்டும் 4 வது முறையாக இணைந்துள்ளார். இது அஜித்தின் முடிவு என்பது தான் உண்மை.

படத்தில் கமிட்டாகியிருந்த யுவன் விலகிய நிலையில் விக்ரம் வேதா இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் என சொல்லப்பட்டு வந்தது, ஆனால் அதிகாரப்பூர்வமான தகவலுக்காக ரசிகர்கள் காத்திருந்தார்.

மேலும் இமான் இசையமைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த தகவல் உறுதியாகியுள்ளது. படத்தயாரிப்பு நிறுவனமே அதை வெளியிட்டுள்ளது.