Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜெயலலிதாவாக மாற அடம் பிடிக்கும் ஹிட் பட நடிகை!

தமிழ் சினிமாவில் ஒப்பற்ற நடிகையாக இருந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர், சிவாஜி என பலரின் படங்களில் நடித்துள்ளார். சினிமா வட்டாரத்தில் அவரின் அணுகுமுறை பல நடிகைகளுக்கு பிடிக்கும்.

விக்ரம் வேதா என்னும் ஹிட் படத்தின் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்க்கு அப்படி ஒரு ஆசையுள்ளது. அண்மையில் பேசிய அவர் எனது லட்சியம் ஜெயலலிதா வேடத்தில் நடிப்பது என கூறியுள்ளார்.

யாராவது அவரின் வாழ்க்கையை படமாக்கினால் அதில் நான் நடிப்பேன். அவரது வாழ்க்கையும், சாதனைகளையும் பார்த்தால் எனக்கு பெரும் மலைப்பாக இருக்கிறது என கூறியுள்ளார்.

நடிகையர் திலகமான பிரபல நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

loading...