Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அலைபாயுதே புகழ் இயக்குனர் மணிரத்னத்திற்கு கிடைத்த முக்கிய வரவேற்பு!

இயக்குனர் மணிரத்னம் என்றால் சினிமா உலகில் அனைவரும் அறிவார்கள். இளைஞர்களுக்கு உடனே நினைவிற்கு வருவது அவரின் அலைபாயுதே படம். இன்றும் எவர் கிரீன் தான்.

அப்படியாக இவரின் படங்கள் அவருக்கு தனி அடையாளத்தை கொடுத்துள்ளது. கடைசியாக இவரின் இயக்கத்தில் காற்று வெளியிடை வெளியானது. ஏகப்பட்ட படங்கள் அவருக்கு பெயரை கொடுத்தது.

இனி அடுத்ததாக சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா என பலரை வைத்து அவர் படம் இயக்கவுள்ளார். இதற்கான அறிவிப்புகள் ஏற்கனவே வெளியானது. பல்லவி என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவிற்கு வந்தார்.

பின் மலையாளத்தில் உனரு படத்தை இயக்கியவர் தமிழில் பகல் நிலவு என்ற படத்தை நடிகர் முரளியை வைத்து இயக்கினர். அவருக்கு தற்போது கர்நாடக அரசு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கவுள்ளது.

மேலும் ரூ 10 லட்சம் ரொக்கப்பரிசையும் அறிவித்துள்ளது. இதற்கான விழா இன்று நடைபெறுகிறது.