Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை ஸ்ரீதேவி பற்றி பரவும் வதந்தி- உண்மையை கூறிய இயக்குனர்

நடிகை ஸ்ரீதேவி உயிரிழந்த போது அவருக்காக வருத்தப்பட்டு வந்தனர் ரசிகர்கள். ஆனால் அதற்குள் ஒருபக்கம் ஸ்ரீதேவி பற்றிய நிறைய பரபரப்பான வதந்திகள் கிளம்ப ஆரம்பித்து விட்டன.

அதில் முதல் செய்தி இயக்குனர் ராம் கோபால் வர்மா, நடிகை ஸ்ரீதேவி பற்றிய வாழ்க்கை வரலாறு படத்தை இயக்குகிறார் என்று தான்.

இதுகுறித்து இயக்குனர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நான் ஸ்ரீதேவி பற்றி ஒரு படம் இயக்க இருப்பதாக நிறைய செய்திகள் வருகிறது. அதில் உண்மை இல்லை, அப்படி செய்வது ஒரு முட்டாள் தனம் என்று கூறுவேன். அவரை போல் நடிக்க எந்த நடிகைக்கும் திறமை இல்லை என்று பதிவு செய்துள்ளார்.