Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

குழப்பத்தில் அட்லீ, இப்படி ஆகிவிட்டதே!

ராஜா ராணி, தெறி, மெர்சல் என ஹாட்ரிக் வெற்றிப்படங்களை கொடுத்தவர் அட்லீ. இவர் அடுத்து யாருடன் இணைந்து கூட்டணி அமைப்பார் என்பதே பலரின் எதிர்ப்பார்ப்பாக இருந்தது.

இதில் யாரும் எதிர்ப்பாராத விதமாக சூப்பர் ஸ்டாருக்கே கதை சொல்லும் வாய்ப்பு அட்லீக்கு அடிக்க, ரஜினியின் அடுத்த இயக்குனர் அட்லீ தான் என கூறப்பட்டது.

ஆனால், இறுதியில் என்ன ஆனது என்று தெரியவில்லை, அட்லீக்கு பதில் கார்த்திக் சுப்புராஜை கமிட் செய்துவிட்டார் ரஜினி.

விஜய்யும் முருகதாஸ் படம் முடிந்து மோகன்ராஜா, ஜில்லா நேசன் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிகின்றது.

இதனால், அட்லீ யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்று அவரே குழப்பத்தில் தான் இருக்கின்றாராம், ஆனால், கண்டிப்பாக ஒரு முன்னணி ஹீரோவுடன் தான் அட்லீ வருவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.