Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித், விஜய், விக்ரமின் ஜோடி இப்போது பிரபல நடிகருக்கு ஜோடியாக! தேவயானி மீண்டும்

நடிகை தேவயானி ஒரு நேரத்தில் சினிமாவில் உச்சம் தொட்டவர். அவரின் சிரிப்பு அவருக்கு மிகவும் அழகு. அந்த சிரிப்பை இன்றும் நினைத்தால் ரசனை தான்.

அஜித், விக்ரம், விஜய் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் பின்னர் இயக்குனர் ராஜ்குமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அவர் குழந்தைகள் குடும்பம் என இருந்துவிட்டார். அவர் ஸ்கூல் டீச்சராக வேலை செய்கிறார் என்றெல்லாம் செய்திகள் வந்தது. சிறு விளம்பரங்களில், நாடகங்களில் கூட அவரை பார்க்க முடிந்தது.

தற்போது நடிகர் விவேக்கிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளாராம். உரு படத்தின் தயாரிப்பாளர் V.P.விஜி, ‘எழுமின்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

ஆதரவற்ற ஐந்து சிறுவர்களின் வாழ்கையில் நடக்கும் விசயங்களை படமாக எடுக்க அவர்களுக்கு விவேக் தேவயானி ஜோடி எப்படி உதவி செய்கிறார்கள் என்பது கதையாம்.