Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் போல அமர்களமான செயலில் இறங்கிய விஜய்! என்ன செய்திருக்கிறார் பாருங்கள்

அர்ஜூன் ரெட்டி அண்மையில் வந்து அனைவரையும் கவர்ந்த படம். வழக்கான தெலுங்கு படங்களை போல இல்லாமல் இப்படம் பெரிதும் பாராட்டப்பட்டது.

இதில் ஹீரோவாக அறிமுகமாகி பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. அதே நேரத்தில் தற்போது இவர் ஆனந்த் சங்கர் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக தமிழில் அறிமுகமாகிறார்.

அதே நேரத்தில் அர்ஜூன் ரெட்டி படம் வர்மா என தமிழில் ரீமேக் ஆக விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இதில் நடிக்கிறார். இந்நிலையில் அந்த படம் போல இந்த படமும் இடம் பிடிக்குமா என்பது பலரின் கேள்வி.

இந்நிலையில் விஜய் ஒரு பக்கம் தமிழ் பேசும் ஆர்வத்தில் தனியே தமிழ் ஆசிரியரிடம் தமிழ் கற்று தேர்வெழுதி வெற்றி பெறும் முயற்சியில் இருக்கிறாராம். ஆனால் இவருக்கு பூர்வீகம் தெலுங்கானா தெலுங்காம்.

தான் புதிதாக நடிக்கும் தமிழ் படத்தில் தானே தமிழில் டப்பிங் செய்ய தீவிர பயிற்சியில் இறங்கியிருக்கிறாராம். பொறுத்திருந்து பார்ப்போம் விஜய் தமிழ் பேசும் ஸ்டைலை.

ஆரம்பத்தில் தெலுங்கில் இருந்து வந்த அஜித்தும் இப்படி தான் முயற்சி எடுத்தார். ஆனாலும் அவரை கேலி கிண்டல் செய்தனர். அதையும் அவர் பொருட்படுத்தாது தன் படங்களின் மீது கவனமாக இருந்தார்.

இப்போது அனைவரும் அவரை விரும்புகிறார்கள். விஜய்யின் முயற்சியும் வெற்றிபெறட்டும்.