Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பரபரப்பான சூழலில் கமல்ஹாசனின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு! பிளான் இதுதான்

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் என கட்சியின் பெயரையும், பிரத்யேகமான கொடியையும் அறிமுகப்படுத்தினார். பணிகள் அடுத்தடுத்து துரிதமாக நடைபெற்று வருகிறது.

கமல்ஹாசனின் முன்னிலையில் அண்மையில் 200 வழக்கறிஞர்கள் அவரின் கட்சியில் இணைந்தனர். இதனையொட்டி பல பெண்கள் இதில் மகளிர் தினத்தில் இணைகிறார்களாம்.

இதற்கான கூட்டம் நாளை சென்னை ராயப்பேட்டை ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடைபெறவுள்ளது. கமல் மற்றும் கமீலா நாசர், ஸ்ரீ ப்ரியா ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

ஆழ்வார் பேட்டையிலுள்ள கமலின் வீடு தற்காலிக அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. இனி அதை கட்சியின் தலைமை அலுவலகமாக மாற்றும் வேலைகள் நடைபெற்று வருகிறதாம்.

வெளியூர் உறுப்பினர்கள் தங்கும் அறை, கருத்தரங்க அறை, அலுவலக அறைகள், பிரம்மாண்ட பெயர் பலகை, கட்சி கொடி மேடை என பல செயல்கள் துரிதமாக நடைபெறுகிறது.