Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜுனியர் சூப்பர் ஸ்டார் குட்டி பையனுக்கு இப்படி ஒரு ஆசையாம்!

இப்போது டிவியில் குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு விசயத்தையும் நாம் ரசிக்கிறோம். அதிலும் போட்டி நிகழ்ச்சிகளில் இந்த குழந்தைகளின் திறமை அபார அளவில் இருப்பது நமக்கே சற்று பொறாமையாக தான் இருக்கும்.

ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற பிரபல நிகழ்ச்சியில் குழந்தைகள் பலர் செய்த செயல்களை நாம் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. அதிலும் அஸ்வந்த் பையனை எளிதாக விட்டுவிடமுடியுமா என்ன?

நடிப்பு, பேச்சு, பாட்டு என கலக்கி எடுத்த இந்த சிறுவனுக்கு தமிழ் ரெமோ என்ற விருதையும் அந்நிகழ்ச்சி நடத்திய நிறுவனம் வழங்கியுள்ளது. சமீபத்தில் நேர்காணலில் கலந்துகொண்ட அவருக்கு ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசையாம். அஸ்வந்தின் பேச்சு திறமையை போல வாழ்வும் செழிக்க வாழ்த்துக்கள்.