அஜித் தற்போது சினிமாவில் பெரும் இடத்தில் இருக்கிறார். ஆனால் அவருக்கான ஒன்று என்றால் படத்தில் நடிப்பது மட்டும் தான். தன் வேலையையே பெரிதாக மதித்து அதிலேயே இருப்பவர்.
இதனாலேயே இவரை அவ்வளவு எளிதாக பொது இடங்களில் நாம் பார்த்துவிட முடியாது. ஆனால் உடன் இருப்பவர்களின் தேவையை தானாக தெரிந்துகொண்டு உடனே உதவி செய்வார் என பலரும் சொல்வார்கள்.
அதுபோல தான் பிரபல சினிமா புகைப்பட கலைஞர் சித்ரா சாமிநாதனுக்கும். நவீன தொழில் நுட்பங்கள் இல்லாத காலங்களில் மொத்த நடிகர்களின் புகைப்படங்களும் இவரின் கைவசம் தான் இருக்கும்.
பிரபலங்களின் வீட்டு நிகழ்ச்சிக்கும் இவர் தான் போட்டோ பொறுப்பு. புகைப்பிடிப்பதால் மாரடைப்பு வந்து நிறைய செலவு செய்த பிறகும் மரணப்படுக்கையில் கிடந்தவருக்கு அஜித் நிதி கொடுத்து உதவியதாக சாமிநாதனின் மகள் தெரிவித்துள்ளார்.