Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்ச்சையான நேரத்திலும் சிம்புவுக்கு வந்த வாய்ப்பு!

நடிகர் சிம்பு என்றால் சிலர் வம்பு என்று நினைக்கிறார்கள். ஆனால் அவர் தற்போது மாறிவருகிறார் என பலரும் சொல்கிறார்கள். தற்போது அவர் மணிரத்னம் இயக்கும் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்துவருகிறார்.

அதோடு அவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சிறப்பு நடுவராக பங்கேற்று வருகிறார். இந்நிலையில் அவர் அடுத்ததாக றெக்க படத்தின் இயக்குனர் ரத்ன சிவா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

அதே போல சமீபத்தில் நீ நாடி ஓகே கதா என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்கில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும், பிரபல தயாரிப்பாளர் தாணு அப்படத்தை வெளியிடுவதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் தாணு அதை மறுத்திருந்தார். இந்நிலையில் இப்படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார். மேலும் ஸ்கெட்ச் படத்தின் இயக்குனர் விஜய் சந்தர் இப்படத்தை இயக்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.