Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கிறிஸ்டோபர் நோலனிடம் மன்னிப்பு கேட்ட கமல்ஹாசன்

இன்சப்ஷன், இன்டர்ஸ்டெல்லர் போன்ற பிரமாண்ட படங்களை இயக்கிய ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் தற்போது தன் குடும்பத்தினருடன் இந்தியா வந்துள்ளார். அவர் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவுள்ளார்.

அவரை இன்று சந்தித்த நடிகர் கமல்ஹாசன் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். எதற்காக என நீங்கள் கேட்பது புரிகிறது. கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய டன்கிர்க் படத்தை கமல் தியேட்டரில் பார்க்காமல் பிறகு டிஜிட்டலாக பார்த்தாராம் - அதற்காகத்தான் மன்னிப்பு கேட்டுள்ளார்.

மேலும் கமல் நடித்த பாபநாசம் படத்தை நோலன் பார்த்ததாக தெரிவித்தது தனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது என கூறியுள்ளார்.