Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் அந்த சூப்பர்ஹிட் பாடல் எனக்கு பிடிக்கவில்லை: அனிருத் ஓபன் டாக்

அஜித்தின் வேதாளம், விவேகம் ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் அனிருத். அதற்கு முன் அவர் விஜய்யின் கத்தி படத்திற்காக கொடுத்த பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட்.

இந்நிலையில் இன்று ஒரு பேட்டியில் வேதாளம் படத்தின் பாடல்கள் பற்றி பேசிய அவர், "முதலில் ஆளுமா டோலுமா பாட்டு எனக்கு பிடிக்கவில்லை. ஷூட்டிங் நடக்கும் நாளன்று நான் இயக்குனர் சிவாவுக்கு கால் செய்து 'இந்த பாடல் வேண்டாம் சார். இது நம்ம ஸ்டாண்டர்டில் இல்லை' என கூறினேன்."

"ஆனால் அவர் என்னிடம் சொல்லாமலேயே பாடலை எடுத்து முடித்துவிட்டு என்னிடம் பேசினார். படப்பிடிப்பில் அஜித் மற்றும் டான்சர்கள் 'பாடல் பயங்கரமாக இருந்தது' என சொன்னதாக கூறினார். பாடல் எனக்கு பிடிக்கவில்லை, ஆனால் ரசிகர்கள் மத்தியில் அது சூப்பர்ஹிட் ஆனது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது" என அனிருத் தெரிவித்துள்ளார்.