Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஐ.பி.எல் போட்டியை எதிர்த்தவர்களுக்கு பதிலடி கொடுத்த பிரபலங்கள்!

ஐ.பி.எல் பலரையும் எதிர்பார்ப்பில் ஆழ்த்திய முக்கிய சீசன் என்றே சொல்லலாம். இரண்டு வருட தடைக்கு பின் களமிறங்கிய சென்னை அணி வெற்றி பெற்றது மிகுந்த முக்கியத்துவமானது.

ஆனால் சென்னையில் நடைபெறவிருந்த அனைத்து போட்டிகளும் காவிரி போராட்டம் காரணமாக வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இது எதிர்பாராத ஒன்றாக கிரிக்கெட் ரசிகர்களுக்கு அமைந்தது.

காரணம் தற்போது நடைபெற்று வரும் காவிரி, ஸ்டெர்லைட் போராட்டத்திலிருந்து விலகி பலரின் கவனமும் கிரிக்கெட் மீது திரும்பி போராட்டம் வலுவிழந்துவிடும் என்பதால் தான்.

இந்நிலையில் ஐ.பி.எல்க்கு எதிரான போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள் சில பிரபலங்கள். இதில் நடிகை வித்யூலேகா ராமன், பாடகர் ஸ்ரீனிவாஸ் என பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.