Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டு கோரிக்கை வைத்த கார்த்திக் சுப்ராஜ் !

பிட்சா, ஜிகர்தண்டா, இறைவி போன்ற வித்தியாசமான படங்களை கொடுத்து தனக்கென்று ரசிகர்களை வைத்திருக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.

இவர் இயக்கத்தில் இன்று தமிழ்நாட்டை தவிர மற்ற இடங்களில் வெளியாகியுள்ள மெர்குரி படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இன்று கார்த்திக் சுப்பராஜ் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில், முதலில் என்னை மன்னித்து விடுங்கள். மெர்குரி படத்தை இன்று வெளியிடும் கட்டாயத்தில் இருந்தோம், ஆகையால் என் மண்ணை தவிர மற்ற இடங்களில் மெர்குரி ரிலீஸ் ஆகியுள்ளது

என் மண்ணில் என் படத்தை வெளியிட தகுந்த சூழ்நிலை அமையாதது மிகுந்த வருத்தத்தை அளித்துவருகிறது. கூடிய விரைவில் எல்லாம் சுமூகமாக முடிந்து உங்கள் பார்வைக்கு வந்துவிடும், அதுவரை பொறுங்கள் தயவு செய்து யாரும் பைரஸியில் (இணையதளத்தில்) பார்க்காதீர்கள் என கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார் .