Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இவ்வளவு அழகான நடிகைக்கு முகத்தில் நடந்த கொடூரம்! அதிர்ச்சியான புகைப்படம் உள்ளே

நடிகைகள் என்றாலே அழகுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதற்காக எவ்வளவு மெனக்கிடல் செய்வார்கள் என்பது பலருக்கும் தெரிந்த விசயம்.

ஹிந்தியில் டிவி சானலில் பிரபலமான நடிகை ரீனா அகர்வால். இவர் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் Kya Haal Mister Panchal என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அவர் தெரு நாய்களுடன் பழகுவது போல ஒரு காட்சி எடுக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக அலறிய நாய் ஒன்று அவரின் முகத்தில் கடித்து குதறியுள்ளது.

இந்த சம்பவத்தால் படுகாயம் அடைந்த ரீனாவை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை செய்துள்ளார். அவருக்கு முகத்தில் தையல் போடப்பட்டுள்ளதாம்.

அதோடு ஏற்கனவே ரீனா வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். அவற்றிடம் எப்படி பழக வேண்டும் என்பது அவளுக்கு தெரியும். ஆனால் எப்படி அந்த நாய் அவளை கடித்தது என தெரியவில்லை என வருத்தமடைந்துள்ளார்கள்.

மேலும் முகத்தில் காயங்கள் நீங்கி தழும்புகள் மறைந்து மீண்டு வர சில நாட்கள் ஆகும் என்பதால் ரீனா படப்பிடிப்பில் தொடர்ந்து கலந்துகொள்ள முடியாத சூழல் எழுந்துள்ளது.