சூர்யாவின் கடந்த படமான தானா சேர்ந்த கூட்டம் எதிர்பார்த்தளவில் இல்லை. படத்திற்கு சில கலவையான விமர்சனங்களும் வந்தன. இதனால் சூர்யா தற்போது நடித்து வரும் NGK படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
செல்வராகவன் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் கடந்த ஃபிப்ரவரி மாதமே தொடங்கிவிட்டது. ஆனால் சினிமா ஸ்டிரைக் காரணமாக கடந்த மார்ச் 1 முதல் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.
தற்போது நிலைமை சீராகி விட்டதால் அனைத்து படப்பிடிப்புகளும் தொடங்கிவிட்டன. தற்போது NGK படத்தின் படப்பிடிப்புகளும் நேற்று முதல் தொடங்கப்பட்டன. இதில் அவருக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கிறார்.