ஹிந்தி சினிமாவை சேர்ந்தவர் நடிகை பிபாசா பாசு. பிரபல நடிகையான இவர் பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார். பெண்ணாக இவரும் பிரச்சனையை சந்தித்துள்ளார்.
இவர் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதே அழகிப்போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு தேடிவந்துள்ளது. 100 பேர் பங்கேற்ற அதில் இவர் கலந்துகொண்டு 3 ல் ஒரு ஆளாக இறுதியில் தேர்வானார்.
மாடலிங் பிடித்து போனதால் பின் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கே இருந்து மாடலிங் கற்றதோடு கல்லூரி படிப்பையும் வீட்டிலிருந்தே தொடர்ந்தாராம்.
சில வருடங்களுக்கு பிறகு இந்தியா வந்த அவரை இங்கிருந்தவர்களும் நினைவில்லையாம். அதோடு அவர் ரவுடிகள் நிறைந்த பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
இதனால் அவர் எப்போதும் தன்னை பாதுகாக்க கையில் சுத்தியல் வைத்திருப்பாராம். ஆபத்து நேரத்தில் அதை கொண்டு எதிரியை தாக்கலாம் என்பதற்காக இப்படி செய்தாராம்.
சினிமாவில் நடிகையாகும் முன் அவர் சில இன்னல்களை அனுபவித்தாராம்.