Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யா மீது கொதித்தெழுந்த முக்கிய பெண்! அதிர்ச்சியாக்கிய தகவல்

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி அண்மையில் நிறைவு பெற்றது. இதில் 16 பெண்களில் கடைசியில் 3 பேரில் ஒருவரை ஆர்யா திருமணம் செய்துகொள்வார்கள் என தகவல் வெளியானது.

கடைசிவரை ஆசை காட்டி எதையோ ஒன்றை சொல்லி ஆர்யா யாரையும் கல்யாணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றிவிட்டார் என சில எதிர்மறையான விமர்சனங்களும் வந்தது.

இந்நிகழ்ச்சியுடைய இறுதிகட்ட ஷூட்டிங்கின் போது கலந்துகொண்ட ஒரு டிவி பிரபலம் ஆர்யாவின் முடிவால் அதிர்ச்சியானார். மேலும் இந்த ஷோ ஒரு திட்டமிட்ட ஸ்கிரிப்டா என அடுத்தடுத்து கேள்வி கேட்டதால் அவரை பேசவிடாமல் சானல் சமாளித்துவிட்டதாம்.

வங்கி ஊழியரான அவர் தற்போது ஒரு பத்திரிக்கையில் தன் வருத்தத்தை பதிவு செய்துள்ளார். இதில் அவர் என்னை இதுவரை 10 க்கும் அதிகமானோர் பெண் பார்த்து சென்றுவிட்டார்கள்.

பெண் பார்த்த நாள் முதல் அடுத்த ஒருமாதம் வரை என்ன சொல்வார்கள் என எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும். அந்த மனநிலை வெளி உலகத்திற்கு தெரியாது.

அதுமாதிரி தான் இந்த எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியிலும் நடைபெற்றுள்ளது. பெண் பார்த்த பின்னாடி எங்களுடைய மனநிலை எப்படி இருக்கும் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

இனிமேல் இதுபோல நடந்துகொள்ளாதீர்கள் ஆர்யா என கூறியுள்ளார்.