மொத்த ரசிகர்களையும் தன் ரியாக்ஷனால் சிரிக்க வைத்த யோகி பாபுக்கு இப்படியும் ஒரு ஸ்பெஷல்!
தமிழ் சினிமா பல திறமையான காமெடியன்களை கண்டு வருகிறது. தற்போதிருக்கும் காமெடியன்களில் தனியே பேசப்படுபவர் யோகி பாபு. அவர் பேசவே வேண்டாம். வந்து நின்றாலே போதும். தன்னாலேயே சிரிப்பு வந்துவிடும்.
திறமை தான் முக்கியத்துவமானது. அழகு பெரிதல்ல என்பது இவருக்கு சரியாக பொருந்தும். யோகி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இவர். அதன் பிறகே யோகி பாபுவாக மாறினார்.
அப்படத்திற்கு பிறகு இவர் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இதில் கலகலப்பு, பட்டத்து யானை, மான் கராத்தே, யாமிருக்க பயமேன், ரெமோ ஆகிய படங்கள் அவருக்கு சிறப்பை பெற்றுத் தந்தது.
தற்போது இவரின் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து பல இயக்குனர்களுக்கும் படங்களில் புக் செய்து வருகிறார்கள். இந்நிலையில் 100வது படத்தை நெருங்கி கொண்டிருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது…
என்னை வைத்து படம் இயக்கிய அனைத்து இயக்குநர்கள் மற்றும் கடவுளுக்கு நன்றி. ரசிகர்கள் இல்லாமல் எந்த நடிகனும் இல்லை. ரசிகர்களுக்கும் நன்றி. சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். வாழ்த்துக்கள் யோகி பாபு..