Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் பட இயக்குனருடன் இணையும் நடிகர் விமல்!

நடிகர் விமல் வந்த ஜோரில் மிக எதிர்பார்ப்புக்குள்ளானார். ஆனால் அவரின் சமீபத்திய படங்கள் பெரிதளவில் இடம் பிடிக்கவில்லை. அவரின் படங்களுக்கென ஒரு தனி ரசிகர்கள் கூட்டமும் இருக்கிறது.

இவர் தற்போது நடிகை வரலட்சுமியுடன் கன்னிராசி படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

இந்நிலையில் விமல் சசிக்குமார் நடித்த வெற்றிவேல் படத்தின் இயக்குனர் வசந்தமணியின் படத்திலும், விஜய் நடித்த தமிழன் படத்தின் இயக்குனர் மஜித் இயக்கத்திலும் நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெறுகிறதாம்.

மேலும் அவர் வரும் மே 3ல் களவாணி 2 படத்தின் ஷூட்டிங்கில் இணையவுள்ளாராம். ஓவியாவை இதில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் போய்க்கொண்டிருக்கிறதாம்.