Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அத்தனை சோதனைகளையும் உடைத்த அஜித்தின் தாரக மந்திரம் இதுவே!

அஜித் சினிமாவில் இந்த இடத்தை பிடிக்க நிறைய கஷ்டபட்டிருக்கிறார். பல சோதனைகளை அவர் சந்தித்திருக்கிறார் என்பதை அவரின் அமைதியே சொல்லும்.

அவரின் முதல் காதலி பைக் என்று தான் சொல்லவேண்டும். பைக்கில் சாகசம் அவருக்கு அத்தனை வெறி. பைக் பந்தயம், கார் பந்தயம் எல்லாம் சென்று சாதித்திருக்கிறார்.

உயிரை பணயம் வைத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஒருமுறை சோழவரம் பைக் ரேஸில் கலந்துகொண்ட போது எதிர்பாராத பெரும் விபத்தை சந்தித்தார்.

கீழே விழுந்ததால் அவரின் முதுகெலும்பில் பலத்த அடிப்பட்டது. பல எலும்புகள் சிதறிக்கிடந்ததாம். மீண்டும் உயிர் பிழைப்பாரா என எல்லோரும் நினைக்கும் அளவிற்கு பெரும் சங்கடம்.

மருத்துவமனையில் கிடந்த போது மருத்துவர்கள் உடைந்து போன எலும்பு துண்டுகளை கையில் எடுத்து வந்து காட்டிய போது அதை வாங்கிய அஜித் எலும்புக்கு முத்தம் கொடுத்தாராம்.

மேலும் அதை அப்படியே கண்ணாடி பாட்டிலில் போட்டு அதை பார்த்து ஐ யம் கம் பேக் என சொல்லிக்கொண்டே இருப்பாராம். தமிழில் சொல்ல வேண்டுமானால் நான் மீண்டு வருவேன்.

அந்த ஒரு தன்னம்பிக்கை தான் அவரின் உயிரை பிழைக்க வைத்தது. அடுத்தடுத்து அவரை படங்களில் நடிக்க வைத்தது. தனக்கான இடத்தை தக்க வைத்துகொள்ள முடிந்தது.

இப்போது சொல்லுங்கள் Never Ever Give Up.