Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நெருக்கமான நடிகைகளால் முக்கிய இயக்குனரின் ஹிட் பட வாய்பை பலமுறை இழந்த பிரபல நடிகை

நடிகை ஐஸ்வர்யாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. பாக்கியராஜ், கமல் என அப்போதிருந்த நடிகர்களில் இருந்து இப்போதிருக்கும் நடிகர்கள் வரை பலருடன் நடித்தவர்.

பிரபல நடிகையான லட்சுமியின் மகளான இவரின் பாட்டியும் சினிமாவில் கொடிகட்ட பறந்த பாகவதருக்கு ஜோடியாக பல படங்களில் நடித்த ருக்மணி அம்மா தான்.

மணிரத்னம் இயக்கி ஹிட்டான ரோஜா படத்தில் ஹீரோயினாக முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம். அந்நேரத்தில் வேறொரு படத்திற்கு ஐஸ்வர்யா அட்வான்ஸ் வாங்கியிருந்ததால் பாட்டியே வாய்ப்பை வேண்டாமென என சொல்லிவிட்டாராம்.

மேலும் அதே இயக்குனரின் அஞ்சலி படத்தில் இரவு நிலவு பாடலை பாடி நடிப்பது போல வாய்ப்பு வந்ததாம். என் மகளை ஹீரோயினாக சொந்த பேனரில் நடிக்க வைக்க இருக்கிறேன் என அதையும் வேண்டாம் என்று அவரின் அம்மா லட்சுமி தவிர்த்து விட்டாராம்.

மறுபடியும் திருடா திருடா படத்தில் ஹீரோயினாக நடிக்க மேக் அப் டெஸ்ட் எடுத்து கடைசியில் ஹிந்தி பட வாய்ப்பால் இதையும் தவறவிட்டேன் என வருத்தப்பட்டிருக்கிறார் ஐஸ்வர்யா..