Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நான் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை, உண்மை என்னவென்றால்- இயக்குனரின் அதிரடி தகவல்

சில தினங்களுக்கு முன் பிரபல தெலுங்கு சினிமா இயக்குனர் ராஜசிம்ஹா தற்கொலைக்கு முயற்சி செய்ததாக தகவல் வந்தது. அதோடு அவர் மயங்கியபடி இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடம் அதிர்ச்சியை கிளப்பியது.

இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், நான் தற்போது நலமாக இருக்கிறேன். உடல்நலக்குறைவால் மயக்கம் அடைந்துவிட்டேன் அவ்வளவு தான், தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை.

எனக்கு சர்க்கரை வியாதி உள்ளது. இன்னும் மூன்று நாட்களில் நான் ஹைதராபாத்துக்கு திரும்பிவிடுவேன், அதன் பிறகு உங்களை எல்லாம் சந்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ராஜசிம்ஹா.