Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திருமணம் முடிந்து சில மாதங்களில் நடிகைக்கு நடந்த கொடுமையான சம்பவம்!

சினிமா பிரபலங்கள் எப்படி வேண்டுமானாலும் இருப்பார்கள் என மக்கள் மத்தியில் சில நேரத்தில் பேசப்படுவது வழக்கம். ஆனால் கணவன் மனைவியாக நல்ல உதாரணமாக எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

ஹிந்தி சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் பாபி டார்லிங். பஞ்சாப் மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் போபாலை சேர்ந்த ராம்னிக் என்பவரை காதலித்து கடந்த 2016 ல் திருமணம் செய்துகொண்டார்.

அண்மையில் இவர்களுக்கு பெரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தற்போது பாபி தன் கணவரிடமிருந்து விவாகரத்து பெற முடிவு செய்துவிட்டாராம்.

விசாரணையில் பாபியை ராம்னிக் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கூறிபட்டுள்ளது. இரவில் தினமும் குடித்து விட்டு ரத்தகாயம் ஏற்படுமளவுக்கு அவர் தாக்குவதாகவும், வலிதாங்கமுடியாமல் துடித்தாகவும், தான் சம்பாதித்த சொத்துக்களை அபகரித்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனால் ராம்னிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.