Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நயன்தாராவின் முக்கிய படம் இவ்வளவு அதிக கோடிக்கு விலை போயுள்ளதாம்!

சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என பெயர் எடுத்த ஒரே நடிகை நயன்தாரா தான். மலையாளத்தில் இருந்து இங்கு வந்து நிலையான இடத்தை பிடித்துவிட்டார்.

சக நடிகைகளுக்கு இவரின் சோலோ ஹீரோயின் பாலிசி மிகவும் பிடித்துவிட்டது. இரண்டாம் நிலை நடிகைகளுக்கும் இவர், ரோல் மாடல் என்றே சொல்லலாம்.

அண்மையில் இவரின் கோலமாவு கோகிலா படத்தின் கல்யாண வயசு பாடலுக்கு இணையதளத்தில் மிகுந்த வரவேற்பு. 6 மில்லியனுக்கும் அதிகமானோர் இப்பாடலை பார்த்துள்ளார்கள்.

இனி அடுத்து விசுவாசம் படத்தில் அஜித்திற்கு ஹீரோயினாக அவர் நடிக்கவுள்ளார். மேலும் தெலுங்கில் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் இவர் தான் ஹீரோயின்.

இதில் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி என முக்கிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் தெலுங்கில் பட வெளியீட்டு உரிமை ரூ 150 கோடிக்கு விலை போயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் டிவி, டிஜிட்டல் ரைட்ஸ் பெரிய தொகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.