Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய படம் ஆரம்பம்!

ரஜினிகாந்தின் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்திருக்கும் படம் காலா. வரும் ஜூன் 7 ம் தேதி வெளியாகவுள்ள இப்படம் நிச்சயம் வசூல் வேட்டை நடத்தும் என்பதில் சந்தேகமில்லை.

இதனையடுத்து அவர் இறைவி, ஜிகர்தண்டா பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான தகவல்கள் அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.

அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே எல்லோரும் ஆசைப்பட்டது போல விஜய் சேதுபதியும் இப்படத்தில் இணைந்துவிட்டார். இந்நிலையில் ஜிகர்தண்டா புகழ் பாபி சிம்ஹாவும், ஜில் ஜங் ஜக் படத்தின் புகழ் சனந்த் ரெட்டியும் நடிக்கிறார்கள்

ஏற்கனவே ரஜினிக்கு சிம்ரன் நடிக்கவுள்ளார் எனவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் படபிடிப்பு வரும் ஜூன் 1 ம் தேதி டேராடூனில் தொடங்கவுள்ளதாம். இதற்காக படக்குழு தயாராகிவருகிறார்கள்.