Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காலா படத்தை கடுமையாக விமர்சித்த சுப்பிரமணியன் சாமி - ட்விட் உள்ளே

ரஜினி மும்பை டானாக நடித்துள்ள காலா பட ட்ரைலர் நேற்று வெளியானது. தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியான ட்ரைலர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இருப்பினும் ஒரு சிலர் படத்தை விமர்சித்து வருகின்றனர்.

மத்தியில் ஆளும் பாஜக-வை சேர்ந்த அரசியல் தலைவர் சுப்பிரமணியன் சாமி காலா படத்தை பெயர் குறிப்பிடாமல் கடுமையாக சாடியுள்ளார்.

"ஆங்கிலேயர்கள் தமிழர்களை மூளை சலவை செய்து கிளார்க் பணி செய்யவைத்தனர். தற்போது சினிமாவில் தமிழர்களை முதுகெலும்பில்லாமல் பொறுக்கிகளுக்கு அடிபணியவைத்துள்ளனர்" என அவர் ட்விட் செய்துள்ளார்.