Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த விருதை அவருக்கு கொடுத்திருக்கலாம்.. மேடையிலேயே கூறிய அனிருத்

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். இவர் இன்று நடந்த விஜய் விருது விழாவில் கலந்துகொண்டார். அதே விழாவில் தனுஷ், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

விழாவில் அனிருத்திற்கு சிறந்த பாடகருக்கான விருது வழங்கப்பட்டது. அப்போது பேசிய அனிருத் நாமினேட் ஆகியிருந்த மற்ற போட்டியாளர்களுக்கு விருதை டெடிகேட் செய்தார். "இந்த விருதை என் வீட்டு குத்து விளக்கு பாடல் பாடிய காகா பாலாவுக்கு கொடுத்திருந்தாலும் சந்தோசப்பட்டிருப்பேன்" என அவர் கூறினார்.

இதற்கு அனிருத்திற்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டு குவிந்து வருகிறது.