Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஞ்சித்தின் அடுத்தப்படம் எது, யாருடன் இணைகின்றார்? அவரே கூறிய பதில்

ரஞ்சித் இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராகி விட்டார். ரஜினியுடன் பணிபுரிய பல பேர் காத்திருக்கின்றனர்.

ஆனால், தொடர்ந்து இரண்டு முறை ரஜினியுடன் பணிபுரியும் வாய்ப்பு ரஞ்சித்திற்கு கிடைத்துவிட்டது, தற்போது காலா ரிலிஸிற்கு தான் பலரும் வெயிட்டிங்.

இந்த நேரத்தில் உங்களின் அடுத்தப்படம் என்ன, சூர்யா, தனுஷ் என்று பேச்சு அடிப்படுகின்றதே! எது உண்மை? என்று ஒரு பேட்டியில் கேட்டுள்ளனர்.

அதற்கு ரஞ்சித் ‘எதுவுமே உண்மை கிடையாது. அந்த மாதிரி யோசனையும் இப்போதைக்கு இல்லை.‘காலா’வை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அது மக்களுக்கான சினிமாவாக மாறும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்’ என்று பிரபல பத்திரிகையில் பேட்டி அளித்துள்ளார்.