Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இவ்வளவு பணம் வந்தால் தற்கொலை செய்துக்கொள்ள முடிவு செய்தேன், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் அதிர்ச்சி பேட்டி

ஒளிப்பதிவாளர்களில் இந்தியளவில் மிகவும் பிரபலமானவர் ரவிவர்மன். இவர் தமிழில் வேட்டையாடு விளையாடு, தசாவதாரம், வில்லு, காற்று வெளியிடை ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார்.

மேலும், பாலிவுட்டில் பர்ஃபி, டமாஷா, ராம்லீலா ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது வெளிவரவிருக்கும் சஞ்சு படத்திற்கும் இவர் தான் ஒளிப்பதிவாளர்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், ஒரு கட்டத்தில் என்னிடம் ரூ 5 ஆயிரம் பணம் இருந்தது, இதை என் மனைவியிடம் கொடுத்து இதில் ரூ 3 ஆயிரம் எடுத்துக்கொள்வோம்.

இதிலிருந்து பணம் எப்போது குறைகின்றதோ இறுதியாக ரூ 2000 வரும் போது தற்கொலை செய்துக்கொள்வோம் என்று கூறினாராம்.

ஏனெனில் அந்த அளவிற்கு அப்போது மன உளைச்சலில் இருந்ததாகவும், வாய்ப்பு கிடைக்காமல் போராடி வந்ததாக ரவிவர்மன் கூறியுள்ளார்.