Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நெகட்டிவ் விமர்சனங்களுக்கு அஜித் ரசிகனிடம் முதன் முறையாக பதில் அளித்த சிவா

சிவா தொடர்ந்து அஜித்துடன் பல வருடங்களாக பணியாற்றி வருகின்றார். வீரம், வேதாளம், விவேகத்தை தொடர்ந்து இந்த கூட்டணி விசுவாசம் படத்தில் மீண்டும் இணைந்துள்ளது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது, இந்நிலையில் இன்று இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இதற்காக விமான நிலையத்திற்கு வந்த சிவாவிடம், ரசிகர் ஒருவர் ‘சார் சமூக வலைத்தளங்களில் வரும் நெகட்டிவ் விமர்சனங்களை கண்டுக்கொள்ளாதீர்கள்’ என்று கூறியுள்ளார்.

அதற்கு சிவா ‘கவலையே வேண்டாம், இந்த முறை, இது உங்களுக்கான மாஸ் படமாக இருக்கும்’ என சிவா தெரிவித்தாராம்.