Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆர்யா இல்லை, முதலில் இந்த ஹீரோ மீது தான் பைத்தியமாக இருந்தேன்: எங்க வீடு மாப்பிள்ளை சீதாலக்ஷ்மி.

நடிகர் ஆர்யா எங்க வீடு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவர் திருமணம் செய்துகொள்ள பெண் தேட நடத்தப்பட்ட நிகழ்ச்சி தான் அது. அதில் தமிழ்நாடு, கேரளா என பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்வேறு பெண்கள் கலந்துகொண்டனர்.

அதில் ஒருவர் தான் சீதாலக்ஷ்மி. கேரளாவை சேர்ந்த இவர் பைனல் வரை போட்டியில் இருந்தார். இந்நிலையில் தற்போது அவர் சமூக வலைத்தளங்களில் அவர் ஒரு புகைப்படத்தைபதிவிட்டுள்ளார். அதில் தான் ஆரம்பகாலத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி மீது பைத்தியமாக இருந்ததாக கூறியுள்ளார்.

மாடலிங் செய்ய துவங்காத நிலையில் MBA படிக்கும் போது நேரம் பட ஷூட்டிங்கிற்கு சென்று அவர் நிவின் பாலி மற்றும் மற்றவர்களை சந்தித்துள்ளார்.