Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஸ்ரீரெட்டி பேச்சையெல்லாம் காமெடியாக்கிய பிரபலங்கள்-அவரது அடுத்த மூவ் என்னவாக இருக்கும்

ஒரு நாளைக்கு ஒரு பிரபலம் என்றவாறு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரபலங்களின் மானத்தை கெடுத்து வருபவர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கில் அனைவரது இமேஜையும் காலி செய்த அவர் அங்கு ஃபோர் அடிக்க ஆரம்பித்ததால் இங்கு கோலிவுட்டிற்கு வந்திருக்கிறார் போலும்.

முதலில் அவர் வைத்த செக் முருகதாஸ் தான், ஆனால் அதுகுறித்து அவர் இன்னும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அதன்பிறகு ஸ்ரீகாந்த், அவருக்கே இங்கு வாய்ப்பில்லாத நேரத்தில் ‘வாய்ப்பு தருவதாக சொன்னீர்களே’ என்று டீவிட் செய்திருந்தார். இப்போது சில நாட்களுக்கு முன்பு ராகாவா லாரன்ஸ்.

உஷாரான இவ்விருவரும் 'எனக்கு நடிகைகளை சிபாரிசு செய்யும் பழக்கம் கிடையாது’ என்று ஸ்ரீகாந்த்தும், ’நான் கடந்த 5 வருடங்களாக தெலுங்கு பக்கமே போகவில்லை, நானி, பவன்கல்யாண் போன்ற மரியாதைக்குரிய நடிகர்கள் மீது அவதூறு பரப்பும் ஸ்ரீரெட்டிக்கு பதிலளிப்பது என்னுடைய மரியாதையை குறைத்து கொள்வதாகும்’ என ராகவா லாரன்ஸும் அவரை டம்மிபீஸ்ஸாக்க முயற்சித்துள்ளனர்.