Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வடிவேலு பட தயாரிப்பாளர் கைது- பணமோசடியில் சிக்கினார்

வடிவேலுவை வைத்து 2015ல் உருவான எலி படத்தை தயாரித்தவர் மதுரையை சேர்ந்த சதீஷ்குமார். இப்படத்திற்காக சினிமா பைனான்சியர் சைதாப்பேட்டையைச் சேர்ந்த ராம்குமாரிடம் ஒன்றரை கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.

படம் வெளிவந்த ஒரு மாதத்தில் திருப்பி தருவதாக கூறியிருந்த அவர் படம் வெளியாகி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பணத்தை திருப்பி தராமல் அவரை மிரட்டியுள்ளார். இதனால் பைனான்சியர் ராம்குமார் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் சதீஷ்குமார் மீது புகார் செய்துள்ளார்.

இதனால் தலைமறைவாக இருந்த சதீஷ்குமாரை நேற்று போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.