Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேரன்பு மேடையில் மிஷ்கினை தாக்கிய கே.எஸ்.ரவிக்குமார்- வார்த்தை மோதல்

பேரன்பு ராம் இயக்கத்தில் இன்னும் சில தினங்களில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.

இதில் பேசிய மிஷ்கின் ‘இப்படத்தின் தயாரிப்பாளர் தேனப்பன் இதுவரை எடுத்தது எல்லாம் ஒரு படமே இல்லை, இது தான் படம்.

இதை பொக்கிஷமாக எல்லோரும் வீட்டில் வைத்திருக்க வேண்டும்’ என்றார், இதை தொடர்ந்து பேசிய ரவிக்குமார் ‘தேனப்பன் பஞ்ச தந்திரம் என்ற படத்தையும் தயாரித்துள்ளார்.

அதுவும் பலரின் வீட்டில் உள்ள ஒரு படம் தான், வெறும் கலைப்படைப்பு மட்டுமே ஒரு சினிமாவை வாழ வைக்க முடியாது.

கமர்ஷியல் படங்களும் வேண்டும், அது இருந்தால் தான் சினிமா நன்றாக பயணிக்கும்’ என பதிலடி கொடுத்தார்.