Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கவர்ச்சி புயல் சன்னி லியோனுக்கு வந்த கடும் எதிர்ப்பு! புதிய சர்ச்சை

சன்னி லியோன் என்ற பெயர் இந்த பெயர் இந்தியா முழுவதும் பரவலாக தெரிந்த ஒன்றாக இருக்கும். பாலிவுட் சினிமாவை சேர்ந்த கவர்ச்சி நடிகையான இவர் பல ஹீரோக்களுடன் முக்கிய படங்களில் நடித்து வருகிறார்.

இவரின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டு இணையதளத்தில் இன்று வெளியாகவுள்ளது. அவரின் உண்மையான பெயர் கரண்ஜித் கவுர் வோரா.

இப்படம் கரன்ஜித் கவுர் : த அண்டோல்டு ஸ்டோரி ஆஃப் சன்னிலியோன் என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கு சீக்கிய அமைப்புகளும், பெண்கள் சங்கமும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

சீக்கிய அமைப்பின் செய்தி தொடர்பாளர் தில்ஜித் சிங் பேடி இது குறித்து பேசியுள்ளர். இதில் கவுர் என்பது சீக்கிய மத குருவால் பெண்களுக்கு வழங்கப்பட்ட மரியாதையான பெயர்.

இம்மதத்தின் போதனைகளை பின்பற்றாதவர்கள் இப்பெயரை பயன்படுத்த அனுமதிக்க முடியாது. அதையும் மீறினால் மத உணர்வுகளை புண்படுத்துவது போலாகும்.

அதனால் சன்னி லியோன் கவுர் என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது. இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.