Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இசையை விட நாயகனுக்கு முக்கியத்துவம் தரும் ஜி.வி.பிரகாஷ்- என்ன காரணமாக இருக்கும்

தமிழ் சினிமா உலகில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஜி.வி.பிரகாஷ். பிறகு மெல்ல நடிகராக அவதாரம் எடுத்த அவர் திரிஷா இல்லனா நயன்தாரா படம் வெற்றி பெற்றதன் மூலம் கொஞ்சம் கவனிக்கப்படுபவரானார்.

அதன்பிறகு அவரது படங்கள் அவ்வளவாக வெற்றி பெறாவிட்டாலும் எப்போதும் கை நிறைய படங்களை வைத்திருப்பார். அது போலதான் தற்போது ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார். ரெட்டை கொம்பு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை பிச்சைக்காரன் படத்தை இயக்கிய சசி இயக்குகிறார். இந்த படத்தில் ஜி.வி.யுடன் நடிகர் சித்தார்த்தும் நடிக்க இருக்கிறார்.

எப்போதும் ஜி.வி, தான் நடிக்கும் படத்திற்கு அவர் தான் இசையமைப்பார் ஆனால் தற்போது அந்த கொள்கையை கைவிட்டார் போல, ஏனெனில் இந்த படத்திற்கு புதுமுக இசையமைப்பாளரான சித்து குமார் இசையமைக்கிறார்.

மேலும் தற்போது ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் சர்வம் தாள மயம் படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான் தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.