Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாதவனின் மகன் செய்யும் வேலையை பாருங்க!

தமிழ் மற்றும் இந்தியில் முன்னணி நடிகராக இருப்பவர் மேடி என செல்லமாக அழைக்கப்படும் மாதவன். இவர் நடிப்பில் வெளியான விக்ரம்வேதா படம் அவரது இரண்டாவது இன்னிங்ஸிற்கு அடித்தளம் போட்டது.

சமீபத்தில் தோள்ப்பட்டையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக படங்களில் நடிக்காமல் ஓய்வில் இருந்த அவர், உடல் குணமடைந்து வருவதால் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில் நீச்சல் வீரராக ஆசைப்படும் அவரது மகன் வேதாந்த், சில மாதங்களுக்கு முன்பு தாய்லாந்தில் நடைபெற்ற 1500 மீட்டருக்கான ப்ரீ ஸ்டைல் பிரிவில் இந்தியாவிற்காக வெண்கல பதக்கத்தை பெற்று தந்துள்ளார்.

இந் நிலையில் தற்போது வேதாந்த் கடலில் Fly boardல் சாகசம் செய்துள்ளார். அதை வீடியோ எடுத்த மாதவன் அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, இது எனக்கு பெருமையான தருணம். கூடவே பயமாகவும் இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.