Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரமாண்ட பட்ஜெட் படத்தில் ரஞ்சித், திரைப்பயணத்தில் அடுத்தக்கட்டம்

ரஞ்சித் அட்டக்கத்தி முதல் காலா வரை தொடர்ந்து தரமான படங்களாக எடுத்து வருபவர். இவர் இயக்கிய காலா படம் பாலிவுட் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை மிகவும் கவர்ந்துள்ளது.

பாலிவுட்டில் கொடிக்கட்டி பறக்கும் நமா பிக்சர்ஸ் ரஞ்சித்துடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளது, ரஞ்சித்தும் அவர்களை சந்தித்து கதை கூறிவிட்டதாக கூறப்படுகின்றது.

இப்படம் வரலாற்று கதையம்சம் கொண்டதாக இருக்கும் என கிசுகிசுக்கப்படுகின்றது, இதனால், எப்படியும் பட்ஜெட் ரூ 200 கோடி வரை இருக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மேலும், இதற்கிடையில் ரஞ்சித் சிறுபட்ஜெட்டிலும் ஒரு படத்தை இயக்குவார் என்று தெரிகின்றது.