Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தெலுங்கு பிக்பாஸில் கமலஹாசனை பார்த்து பாகுபலி வில்லன் ராணா என்ன சொல்லியிருக்கிறார் என்று பாருங்களேன்!

சினிமா, அரசியல் என்று மட்டுமில்லாமல் பிரபல நிகழ்ச்சி பிக்பாஸையும் தொகுத்து வழங்கி வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவரது படமான விஸ்வரூபம்-2 வரும் 10ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

இதை தெலுங்கிலும் ப்ரோமோட் செய்யும் விதமாக தெலுங்கு பிக்பாஸ் வீட்டிற்குள்ளும் சென்றிருந்தார். இந்நிலையில் திரும்பி சென்னைக்குவர ஹைதரபாத் விமான நிலையத்திற்கு வந்தபோது, நடிகர் ராணா எதோ கடவுளை சந்திப்பது போல் சந்தித்து போட்டோ ஒன்றை எடுத்து கொண்டுள்ளார்.

இதனை தனது டிவிட்டரில் பதிவிட்டு, ஒரு வருடத்தில் கற்று கொண்டதை ஒரே மணிநேரத்தில் நீங்கள் கற்று கொண்டுள்ளீர்கள் என்றால் நீங்கள் கமலஹாசனை சந்தித்துவிட்டீர்கள் என்று அர்த்தம் என சில வாக்கியங்களையும் பதிவிட்டுள்ளார்.