Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியின் 2.0 படம் எப்படி இருக்கும் என ஏ.ஆர்.ரகுமான் சொன்னதை கேட்டீங்களா? இந்த கிளைமாக்ஸ் தான்..

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கிவரும் படம் தான் 2.0. திரைக்கு வந்தால் பல சாதனைகளை படைக்கும் என ரசிகர்களால் சொல்லப்படும் இப்படத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு கிராபிக்ஸ் காட்சிகள் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

இப்படத்தில் ரஜினியுடன் ஹிந்தி நடிகர் அக்சய்குமாரும் நடிக்கிறார். இசை வேலையை இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் கவனிக்கிறார். இந்நிலையில் இவர் சில தினங்களுக்கு முன் ஒரு பேட்டியில் 2.0 படத்தை பற்றி சில விஷயங்களை கூறியுள்ளார்.

அதில், ’நான் ஒரு பாடலை பார்த்தேன், CGலாம் இல்லை ஆனால் பிரம்மித்துவிட்டேன். இது அவரால் மட்டுமே பண்ணமுடியும். முக்கியமாக கிளைமாக்ஸ் சீன் மிகப்பிரமாதம். இதன்மூலம் இந்தியன் என்றாலே ஒரு தனித்துவமாக பார்ப்பார்கள். இதெல்லாம் ஷங்கருக்குதான் போய் சேரும்,’ என்றார்.