பிக்பாஸ் ஐஸ்வர்யாவை கிழித்து தள்ளிய செண்ட்ராயனின் மனைவி- பாலாஜியை பற்றி என்ன சொன்னார் தெரியுமா
பிக்பாஸில் சர்வாதிகாரியாக தற்போது விளங்குபவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. ஆரம்பத்தில் இவர் இவ்வளவு கொடூரமாக மாறுவார் என யாரும் நினைத்து பார்க்கவில்லை. பலரது வசைப்பாட்டுக்கு ஆளாகியுள்ள இவர் செண்ட்ராயன் மனைவியிடம் வேற லெவலில் திட்டுகளை வாங்கியுள்ளார்.
செண்ட்ராயனிடம் இருந்து காபியை பிடுங்கியதால் இவ்வளவு கோபமானாரா என்று தெரியவில்லை. ஹிட்லரில் ஆரம்பித்து பல வார்த்தைகளை பயன்படுத்திய அவர், பாலாஜி நல்லவர் என முடித்தார்.
ஓவியாவாக மாற ஐஸ்வர்யா நினைக்கிறாரா என்ற கேள்விக்கு தான் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார் அவர். பிக்பாஸ்ல ஓவியா எங்க இவங்க எங்க என்று கிழிகிழி என கிழித்துவிட்டார்.