Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மறுபடியும் விஜய் ரசிகர்களை சீண்டியுள்ள சூர்யா பட தயாரிப்பாளர்- இப்போது என்ன சொல்லியுள்ளார் தெரியுமா

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் NGK படத்தை தயாரிப்பவர் தான் S.R.பிரபு. இவர் தான் NGK படம் தீபாவளிக்கு வரும் என ஏற்கனவே அறிவித்திருந்தார். பிறகு சில காரணங்களால் படம் தள்ளிபோக கூடும் எனவும் கூறினார்.

இதனால் சோர்வுற்று இருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இன்று படத்தின் ரிலீஸை பற்றி கூறிவிட்டு, ’அதுவரை மற்றவர்களிடம் சண்டை போடாமல் இருங்கள்’ என சூர்யா ரசிகர்களிடம் கூறியிருந்தார். மேலும் குறிப்பாக Not worth it என கூறிவிட்டார். அந்த மற்றவர்கள் விஜய் ரசிகர்கள் தான் என சமூக வலைத்தளத்தில் ஒரு பேச்சு எழுந்தது. ஏனெனில் சூர்யா-விஜய் ரசிகர்களுக்கு இடையே தான் தற்போது வார்த்தை மோதல் நடந்து வருகின்றது.

இதனால் அமைதியாக இருந்த சூர்யா ரசிகர்கள் #NotWorthItSARKARfans என்ற ஹாஸ்டேக்கை பயங்கர டிரெண்டாக்கி விட்டனர். இதற்கு விஜய் ரசிகர்களும் பதிலடி கொடுத்து கொண்டுதான் உள்ளனர். இதனால் டிவிட்டரே ரணகளமாக மாறியது.

தற்போது இதற்கும் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார் தயாரிப்பாளர். இதனால் மேலும் இருதரப்பினரும் சூடாகியுள்ளனர்.