Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் எப்போதுமே ஒரு லெஜெண்ட் தான்! பிரபல விளையாட்டு வீராங்கனை

அஜித்தை சினிமா படங்களில் எப்படி ரசிகர்கள் ரசிகிறார்களோ அது போல அத்துறை சார்ந்தவர்களும் பார்க்கிறார்கள் அதை விட சுயவாழ்க்கையில் அவரின் குணங்களை அதிகம் நேசிப்பவர்களும் இருக்கிறார்கள்.

அஜித்திற்கு படங்களில் நடிப்பது போக விளையாட்டில் ஆர்வம் இருக்கும். தற்போது அறிவியல் ரீதியான புதிய கண்டுபிடிப்புகளில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

சென்னை பல்கலைக்கழகம் கூட அவர் விமானத்துறை ஆலோசகராக அண்மையில் தேர்ந்தெடுத்தது. அத்துடன் அவர் பயிற்றுவித்த அணியும் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.

மேலும் அவருக்கு சிறுவயதிலிருந்தே கார், பைக் என்றால் மிகவும் பிடிக்கும். பல போட்டிகளில் அவர் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் அவரை ஆலிஷா அப்துல்லா மீண்டும் வாழ்த்தியுள்ளார்.

பைக் ரேசில் சாதனை படைத்து வரும் இந்த இளம் பெண் தன் ட்விட்டர் பக்கத்தில் முன்பு அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அஜித் எப்போதும் தன் பலத்தால், வலிமையான வார்த்தையால் உற்சாகப்படுத்துகிறார். எப்போதும் அவர் மாமனிதர் என கூறியுள்ளார்.