Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கலைஞர் என்ன ஆனார்? கண்ணீர் விட்டு அழுத பிரபல நடிகை

தமிழகத்தில் தற்போது மிகவும் பரபரப்பாக்கியுள்ள விசயம் கலைஞர் கருணாநிதி உடல் நிலை தான். கடந்த 10 நாட்களாக வயது முதுமையின் காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார். இந்நிலையில் நேற்று மாலை முதல் அவரின் உடல் நிலை கவலைக்கிடமானது.

இதனால் மருத்துவமனையில் தொண்டர்களும், ஆதரவாளர்களும், ரசிகர்களும் கூடினர். சில மணிநேரத்திற்கு முன் கருணாநிதி உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது என மருத்துவ அறிக்கை வெளியானது. இந்நிலையில் அவரை காண குடும்பத்தினரும், அரசியல் பிரமுகர்களும் மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.

இந்நிலையில் அவர்கள் அனைவரும் கவலையுடன் கண்ணீருடன் கோபாலபுரம் இல்லத்திற்கு திரும்புவதை காணமுடிகிறது. தற்போது நடிகை குஷ்பூ அழுதபடி மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளார்.