Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தன் மரணத்தை 10 வருடங்களுக்கு முன்பே கமலிடம் கூறிய கலைஞர்- ஆச்சரியமான நிகழ்வுகள்

பிரபல எழுத்தாளராக இருந்து அரசியலில் மிகப்பெரும் சக்கரவர்த்தியாக மாறியவர் கலைஞர் கருணாநிதி. இவருக்கும் நடிகர் கமலுக்கும் உண்டான நட்பு அளப்பரியாதது.

தான் நடிக்கும் படங்கள் அனைத்தையும் கலைஞருக்கு போட்டு காட்டிவிடுவாராம் கமல். அந்த வகையில் கடைசியாக போட்டு காட்டிய படம் தசாவதாரம். அதில் கமலின் நடிப்பைப் பார்த்து அவரது கன்னத்தை செல்லமாக கிள்ளினாராம், கலைஞர்.

அப்போது தான் இன்னும் கொஞ்ச நாள் தான் இருப்பேன் என கூறினாராம். அதற்கு கமல், அதெல்லாம் ஒன்னுமில்லை, நீங்கள் இன்னும் நீண்டநாள் இருப்பீங்க பாருங்களேன் என்றாராம். கமல் சொல்லியது போல அதன்பின் 10 வருடங்கள் கழித்தே அவரது உயிர்பிரிந்துள்ளது.